மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரஹ்மானை சாடிய ராம்கோபால் வர்மா

ஏ.ஆர்.ரஹ்மானை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ராம்கோபால் வர்மா. இருவரும் இணைந்து பணியாற்றிய ரங்கீலா மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை இந்தி பேசும் ரசிகர்கள் ரங்கீலா திரையரங்கில்தான் முதல் முறையாக அனுபவப்பட்டார்கள் என்று சொல்லலாம்.

ரங்கீலாவுக்குப் பிறகு ரஹ்மானும் வர்மாவும் இணைந்து பணியாற்றவில்லை. ரஹ்மானின் இசை பற்றிய வர்மாவின் பார்வை எத்தகையது என்பதும் ரசிகர்களுக்கு தெ‌ரியாமலே இருந்தது.

இந்நிலையில் ரஹ்மான் இசை பற்றி காட்டமாக கருத்து தெ‌ரிவித்துள்ளார் வர்மா.

ரஹ்மான், மணிசர்மா, தேவி ஸ்ரீபிரசாத் போன்றவர்கள் இசையை கொலை செய்கிறார்கள் என்றும் இசைக்குப் பதில் இவர்கள் சத்தத்திற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள் எனவும் கடுமையாக குற்றம்சாற்றியிருக்கிறார். இவர்களில் மணிசர்மாவை வர்மாதான் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இளையராஜாவின் இசையை புகழ்ந்தும் கூறியிருக்கிறார் வர்மா.

இணையத்தில் புழங்குகிறவர்களுக்கு நல்ல விவாதப் பொருளை தீனியாக்கியிருக்கிறார் வர்மா. வாசகர்களே... போட்டுத் தாக்குங்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.