இலங்கைத் திருநாட்டின் 68வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் நீண்ட கால இடைவேளைக்குப் பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலைமைதாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மற்றும் அமைச்சர்கள், அரச தலைவர்கள் பலரும் பங்குபற்றினர்.
1949ம் ஆண்டில் முதல் முதலில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. பின்னர் நாட்டில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளால் நீண்ட காலமாக நிறுத்தப்பட்ட நிகழ்வு மீண்டும் இன்று (04/02/2016) ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- A.D.ஷான் -
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.