வெயில் படத்துக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் அங்காடித்தெரு. ஐங்கரன் இண்டர்நேஷனல் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
சென்னை ரங்கநாதன் தெருவை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார் வசந்தபாலன். முக்கியமாக தென் தமிழ்நாட்டிலிருந்து இங்குள்ள கடைகளுக்கு விற்பனை பிரிவில் பணிபுரிய வரும் ஏழை இளைஞர்களின் வாழ்க்கையை இதில் ஆவணப்படுத்தியுள்ளார்.
இரவு நீண்ட நேரம் கழித்து ரங்கநாதன் தெருப் பகுதியில் உணவருந்த சென்றதாகவும், அப்போதும் அங்கு பணியாளர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததாகவும், பலரும் அறியாத அந்த உலகை படமாக்க வேண்டும் என்ற உத்வேகம் அப்போதுதான் தனக்கு ஏற்பட்டதாகவும் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி இருவரும் இசையமைத்துள்ளனர். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். இவரது, அவள் அப்படியொன்றும் அழகில்லை... என்ற பாடல் இப்போதே பிரபலம் அடைந்துள்ளது.
மகேஷ், அஞ்சலி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். கெஸ்ட் ரோலில் கவிஞர் விக்ரமாதித்யன், சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். சந்தடிமிக்க ரங்நாதன் தெருவில் சில காட்சிகளை எடுத்துள்ளனர். பிற காட்சிகளை ரங்கநாதன் தெரு போன்ற அரங்கு அமைத்து அதில் படமாக்கியுள்ளனர். ரங்கநாதன் தெரு அரங்கை உருவாக்கியவர் கலை இயக்குனர் ஜிகே.
ஜெயமோகன் படத்தின் வசனத்தை எழுதியுள்ளார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் இப்படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.