ஆட்டநாயகன், குள்ளநரிக்கூட்டம் என்று எப்போதாவதுதான் ரம்யா நம்பீஸனை தமிழ் சினிமா பயன்படுத்திக் கொள்கிறது. மலையாளத்தில் நிலைமை ஓரளவு பரவாயில்லை.
அழகுடன் குரலும் இனிமையாக இருக்கும் மம்தா மோகன்தாஸ், ஆண்ட்ரியா வரிசையில் ரம்யா நம்பீஸனும் வருகிறார். இவரது குரலில் பக்திப் பாடல் கேசட்டுகள் வெளிவந்திருக்கின்றன. முதல் முறையாக சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மலையாளத்தில் இவன் மெகாரூபன் என்ற படம் தயாராகிறது. இதில் நடிப்பதுடன் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.
வாய்ப்பு கிடைத்தால் தமிழிலும் தனது குரலை பதிய வைக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ரம்யா நம்பீஸன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.