சென்னையில் உள்ள பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ், ராஜரத்னம் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை தியாகராயர் நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகைக்கடைகளில் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளிலும், சரவணா கடை உரிமையாளர்களின் 7 வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பதுக்கப்பட்ட பொருட்களுக்கு ஆவணம் காட்ட முடியாமல் உரிமையாளர்கள் திணறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒரே இடத்தில் மட்டும் 3.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.1.5 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை இருப்புகள் பற்றி மதிப்பீடு மட்டுமே முடிந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கணக்கில் வராத பொருட்களுக்குரிய ஆவணம் காட்டப்படவில்லை என்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து மதிப்பிட ஒரு மாதம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.