தற்போது பட வாய்ப்புக்கள் ஏதுவும் இல்லா விட்டாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஒரு ரவுண்ட் கலக்கிவர் நம்ம நமீதா. அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு மிகநீண்ட நாட்களாக மனதில் உள்ளது. அதனால், அரசியலுக்கு விரைவில் வருவேன் என நடிகை நமீதா கருத்து தெரிவித்துள்ளார். தமிழக இளசுகளை தனது இளமை மூலம் கிறங்கடித்தவர் நடிகை நமீதா. புரட்சிக் கலைஞர் என்று அன்று அன்புடன் அழைக்கப்பட்ட விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழில் அறிமுகமானர். பின்பு தமிழகத்தில் உள்ள பிரபலமான நடிகர்கள் பலருடன் நடித்து அசத்திவிட்டார்.
இந்த நிலையில், நடிகை நமீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துவிட்டேன். இதில் எனக்கு பிடித்த மொழி தமிழ்தான். தமிழ் ரசிகர்களை என்னால் மறக்க முடியாது. அந்த அளவு அவர்கள் என்மீது அன்பு வைத்துள்ளார்கள்.
ஆனால், சமீபத்தில், வெளிவந்த இளைஞன் திரைப்படத்துக்கு பின்பு, நடிக்கவில்லை. இந்த நிலையில் தான் எனது உடல் எடை கூடியது. தற்போது என் உடல் எடையை சுமார் 18 கிலோ வரை குறைத்துள்ளேன். மீண்டும் மக்கள் விரும்பும் நல்ல தமிழ் படங்களில் நடிப்பேன்.
அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாக மனதில் உள்ளதுதான். அதனால், அரசியலுக்கு விரைவில் வருவேன். அரசியல் கட்சியில் சேரச் சொல்லி எனக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்து கொண்டு தான் உள்ளது. எனவே, நல்ல முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றார். தமிழக அரசியல் களத்தில் பிரபல நடிகை குஷ்புவுக்கு போட்டியாக நடிகை நமீதாவும் அரசியலில் குதிக்க உள்ளார் என்ற பேச்சு இப்போது முதலே வலம் வரத் தொடங்கிவிட்டது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.