மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> லாரன்சின் கோ‌ரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை.

தமிழைவிட தெலுங்கில் லாரன்சின் பெயருக்கு அதிக ம‌ரியாதை. அவர் இயக்கிய இரு படங்களும் ஹிட் என்பதால் அவரது இயக்கத்தில் நடிக்க அனைத்து ஹீரோக்களும் ஆவலாக இருக்கிறார்கள்.

அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை லாரன்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டிருந்தனர். இந்நிலையில் அனுஷ்காவுக்குப் பதில் வேறொரு நடிகையை ப‌ரிந்துரை செய்திருக்கிறார் லாரன்ஸ். அவர், லட்சுமிராய்.

முரட்டு சிங்கம் படத்துக்குப் பிறகு லாரன்சும், லட்சுமிராயும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். இதனால் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் லட்சுமிராயை பயன்படுத்த லாரன்ஸ் முயன்று வருவதாக கேள்வி அதன் எதிரொலிதான் பிரபாஸ் ஜோடியாக ராயை ப‌ரிந்துரைத்திருப்பதும்.

லட்சுமிராய் பிரபாஸுக்கு அக்கா போல் தெ‌ரிவார் என்பதால் லாரன்சின் கோ‌ரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை என்கிறது ஆந்திர படவுலகம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.