மிஷ்கினின் புதிய படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இயக்குவதாகவும், ஆர்யா நடிப்பதாகவும் முன்பு கூறப்பட்டது. படத்தின் கதை மார்ஷியல் ஆர்ட் என்பதால் சீனாவுக்கு செல்ல வேண்டும், ஷாவோலினில் தங்க வேண்டும் என பல லட்ச ரூபாய்க்கு மிஷ்கின் பட்டியலை காட்ட, அந்த புராஜெக்டே ட்ராப்பானது. அப்போது எழுந்த கேள்வி, மிஷ்கின் அடுத்து யாரை இயக்கப் போகிறார்?
இந்த கேள்விக்கு இப்போது சின்னதாக விடை கிடைத்திருக்கிறது. சில நாட்கள் முன்பு மிஷ்கினை சிம்பு சந்தித்திருக்கிறார். இருவரும் இணைந்து படம் செய்வது குறித்து அப்போது பேசியிருக்கிறார்கள். இந்தப் பேச்சு ஆரோக்கியமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் இருதரப்பிலும்.
விரைவில் இவர்கள் இணைந்து படம் எடுப்பது குறித்த அறிவிப்பு வெளிவரலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.