உலகம் முழுவதும் சென்று இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் இந்த உலகப் பயணம் தொடங்குகிறது.
ஹாரிஸ் இதுவரை லைவ் கான்சர்ட் செய்ததில்லை. முதல் முறையாக பிரமாண்டமாக மிகப் பிரமாண்டமாக நடத்தயிருக்கிறார். அக்டோபர் மாதம் சென்னையில் முதல் நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த லைவ் கான்சர்ட் பெங்களூரு, ஹைதராபாத் என தொடர்ந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் என வெளிநாடுகளை பரவசப்படுத்தி டர்பன், கேப் டவுன், ஜோகன்ஸ்பர்க் என தென் ஆப்பிரிக்கா ரசிகர்களை மகிழ்விக்கயிருக்கிறது.
ஹாரிஸின் முதல் லைவ் கான்சர்ட் என்பதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த இசை மேளாவை எதிர்நோக்கியுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.