மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> I.P.L பொறியில் சிக்கிய ஷாருக்கானும் காங்கிரஸ் எம்.பியும்

ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா அணியை வாங்கி உள்ளார். இதிலும் முறைகேடு நடந்து இருப்பது தெரியவந்தது. இதனால் கொல்கத்தா அணி அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் முறைகேடு நடந்ததற்கான சில ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்குவதற்கு பல கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. மொரீசியஸ் நாட்டில் இருந்து பெருந்தொகை வந்துள்ளது. இதில் தான் முறைகேடு நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஷாருக்கான் யாருக்கோ பினாமியாக செயல்பட்டு வரிஏய்ப்பு செய்ய அல்லது கறுப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது பற்றி வருமான வரி அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷாருக்கான் காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா நடத்தும் நிறுவனத்தில் ரூ.10 கோடி முதலீடு செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் சுக்லா “பேக் கிளாமர்” என்ற பெயரில் மீடியா நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சினிமா தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

இதில் ஷாருக்கான் 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.10 கோடி முதலீடு செய்து இருக்கிறார். இத்தனைக்கும் இந்த நிறுவனம் நலிவடைந்த நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது.

ராஜீவ் சுக்லா ஐ.பி.எல் ஆட்சிக்குழு உறுப்பினராக வும், இந்திய கிரிக்கெட் சங்க நிதி கமிட்டி தலைவராகவும் இருக்கிறார். எனவே இவர் மூலம் ஐ.பி.எல்.லில் ஷாருக்கான் ஆதாயம் பெற்று இருக்க வேண்டும் அதற்காக அவர் ரூ.10 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

முதலாவது ஐ.பி.எல். ஏலம் முடிந்து 1 மாதத்தில் இந்த முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதாவது 2008 ஜனவரி மாதம் முதல் ஐ.பி.எல். ஏலம் நடந்தது. இதில் கொல்கத்தா அணியை ஷாருக்கான் வாங்கினார். அடுத்த மாதமே சுக்லா நிறு வனத்தில் ரூ.10 கோடி முத லீடு செய்துள்ளார். இது பல்வேறு வகை சந்தேக கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இது பற்றி முழுமையான விசாரணை நடத்தினால் ஷாருக்கானும், ராஜீவ் சுக்லாவும் வசமாக சிக்கும் வாய்ப்பு உள்ளது
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.