மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜீவா, நரேன் மிஷ்கின் இயக்கத்தில்.

மிஷ்கின் இயக்கும் படத்தில் ‌‌ஜீவா நடிப்பது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. இந்தத் தகவலை உறுதி செய்தவர் ‌‌ஜீவாவுக்கு வில்லனாக நடிக்கப் போகும் நரேன்.

சித்திரம் பேசுதடி மூலம் நரேனை ஹீரோவாக தமிழில் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார். அடுத்து அஞ்சாதேயிலும் ஹீரோவாக நடித்தார் நரேன். இரண்டு படங்களும் ஹிட். இவை தவிர வேறு சிலப் படங்களில் நரேன் நடித்திருந்தாலும் இவ்விரு படங்கள் மட்டுமே அவர் பெயர் சொல்லும் படங்களாக இருக்கின்றன.

‌‌ஜீவாவை வைத்து தன்னுடைய முகமூடி படத்தை மிஷ்கின் எடுப்பதாக ஏற்கனவே தெ‌ரிவித்திருந்தோம். இந்தப் படத்தில் வில்லனாக நரேன் நடிக்கிறார். அஞ்சாதேயில் பிரசன்னா நடித்தாலும் ஹீரோவுக்கு இணையாக அவரது கேரக்டர் பேசப்பட்டது. அதேபோல் இந்த வில்லன் கதாபாத்திரமும் பேசப்படும் என்றார் நரேன்.

யுத்தம் செய் படத்துக்கு இசையமைத்த கே இந்தப் புதிய படத்துக்கும் இசையமைப்பார் என தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.