
அவன் இவன் படத்துக்கு முன்னோட்டம் தேவையில்லை. பாலா படம் என்றாலே போதும். மற்றதை ரசிகர்களே யூகித்துக் கொள்வர்.
அவன் இவனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார். பாலா இயக்கம். இதில் அவன் வாலடர் வணங்காமுடி வேடத்தில் விஷாலும், கும்பிடுறேசாமி வேடத்தில் இவன் ஆர்யாவும் நடித்துள்ளனர். மாறு கண் கொண்டவராக படம் நெடுக வருகிறார் விஷால்.
ரிமிக்ஸ் பாடல்கள் இருப்பதால் யுவன் ஷங்கர் ராஜாவை பயன்படுத்தியிருக்கிறார் பாலா. ஜனனி அய்யர் ஹீரோயின். கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். ஜி.எம்.குமார் முக்கியமான வேடத்தில் வருகிறார். சிவாஜிக்குப் பிறகு இவர்தான் என்று பாலா பாராட்டியிருப்பது இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
வழக்கம் போல சண்டைக் காட்சிகள் மிரட்டும் என்கிறார்கள். எழுபதடி உயர மரத்தில் எந்த பிடிமானமும் இல்லாமல் விஷால் ஓடுகிற காட்சி பிரமிக்க வைக்கும் என்பது படப்பிடிப்புக் குழுவினரின் நம்பிக்கை. இதுபோக தேனி பக்கம் இறைச்சிக்கு மாடுகளை விற்பவர்கள் தண்ணீரில் மண் கலந்து கொடுக்கும் கொடூர நிகழ்வுகளையும் படத்தில் காட்டியுள்ளாராம். சூர்யா நடிகர் சூர்யாவாக ஒரு காட்சியில் நடித்துள்ளார்.
நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருக்கும் இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகிறது. சென்சார் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.