தென்னிந்தியப் படங்கள்தான் சேஃப் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறார் சல்மான்கான். அதலபாதாளத்துக்கு சென்ற சல்மானின் மார்க்கெட்டை முன்பு தேரே நாம் படம்தான் தூக்கி நிறுத்தியது. இது சேது படத்தின் இந்தி ரிமேக்.
அதேபோல் இந்தியின் சூப்பர் ஸ்டார் சல்மான்கான்தான் என்பதை வான்டட் படம்தான் நிரூபித்தது. இது போக்கிரி படத்தின் ரிமேக். தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரெடி உத்தமபுத்திரனின் ரிமேக். அடுத்து சல்மான் நடித்துக் கொண்டிருப்பதும் காவலன் படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் விஜய் நடித்த காவலன் தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இந்தியில் பாடிகாட் என்ற பெயரில் தயாராகி வரும் இந்தப் படத்தில் விஜய் வேடத்தில் சல்மான்கானும், அசின் வேடத்தில் கரீனாகபூரும் நடிக்கின்றனர். சித்திக் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு ஹிமேஷ் ரேஷமைய்யா இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.