வரும் ஜூலை 3ஆம் தேதி கோவையில் ரஞ்சினியை மணக்கிறார் கார்த்தி. சிவகுமார், அவரது மனைவி, சூர்யா, ஜோதிகா ஆகியோர் முதல்வருக்கு அழைப்பிதழ் கொடுத்த நேரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார் கார்த்தி. எல்லாம் திருமணத்துக்கு அழைப்புவிடுக்கதான்.
இந்த சந்திப்பின் போது பலரும் பலவித கேள்விகளை எழுப்பினர். முக்கியமாக கார்த்தியின் வருங்கால மனைவி சினிமாத்துறையில் ஈடுபடுவாரா? பல ஹீரோக்களின் மனைவிகள்தான் அவர்களின் காஸ்ட்யூமை கவனித்துக் கொள்கிறார்கள். அதன் விளைவாக எழுப்பப்பட்ட கேள்வி இது.
தந்தை சிவகுமாரைப் போலவே வாழ்க்கைத் தத்துவம் கார்த்திக்கும் தெரிந்திருக்கிறது. சினிமா வேறு, வாழ்க்கை வேறு. அவங்க சினிமா பக்கம் வரவே மாட்டாங்க என்றார் எக்ஸ்ட்ரா உறுதியுடன்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.