மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் - அவன் இவன் முதலிடம்.

5. கோ
ஐந்தாவது இடத்தில் கோ. எடுத்தவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு கலெக்சனில் புரட்சி செய்திருக்கிறது. ஒன்பது வாரங்கள் முடிவில் இப்படம் 7.99 கோடிகளை வசூலித்ததுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.7 லட்சங்கள்.

4. பிள்ளையார்தெரு கடைசிவீடு
‌ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கும் இப்படம் முதல் மூன்று தினங்களில் 5.4 லட்சங்களை மட்டுமே வசூலித்து தயா‌ரிப்பாளர் வயிற்றில் ஆசிட் வார்த்துள்ளது.

3. உதயன்
கருணாநிதியின் பேரன் நடித்திருக்கும் உதயன் சுமாராகவே உதித்திருக்கிறது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 8.9 லட்சங்கள். கலைஞர் டிவி விளம்பரத்துக்கே காணாதேப்பா.

2. நூற்றெண்பது
சித்தார்த் நடித்திருக்கும் நூற்றெண்பது படத்துக்கு இளசுகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இப்படம் வெளியான முதல் இரு தினங்களில் 29.73 லட்சங்களை வசூலித்துள்ளது.

1. அவன் இவன்
இந்த வாரமும் அதே முதல் இடத்தில் அவன் இவன். ஆனால் வசூல் கணிசமான அளவு குறைந்துள்ளது. முதல் வார இறுதியில் 89 லட்சத்துக்கும் மேல் வசூலித்தப் படம் இரண்டாவது வார இறுதியிலேயே 37.6 லட்சமாக அதலபாதாளத்துக்கு வந்துள்ளது. இதன் மொத்த வசூல் 2.23 கோடிகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.