அர்த்தமுள்ள படத்தில் நடிப்பதைவிட அடிதடி படத்தில் நடித்தால் மாஸ் இமேஜை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது அண்ணன் சூர்யாவுக்கும், தம்பி கார்த்திக்கும் தெரிந்திருக்கிறது. முதலிரண்டு படங்கள் தவிர்த்து கார்த்தி நடித்த நடிக்கப் போகிற அனைத்துமே கமர்ஷியல் படங்கள்.
சிறுத்தைக்கு அடுத்து சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்தது. இடையில் சகுனி வர சின்ன இடைவெளி. சகுனிக்குப் பிறகு சுராஜ் கார்த்தியை இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் என கூறப்படுகிறது. கார்த்தி ஜோடியாக அனேகமாக அனுஷ்கா நடிக்கலாம் என்கிறார்கள். சிறுத்தை படத்திலேயே அனுஷ்கா நடித்திருக்க வேண்டியது... கால்ஷீட் பிரச்சனை, தமன்னாவுக்கு அடித்தது யோகம்.
சகுனி முடிந்த பிறகு சுராஜ் படம் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.