
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் அவரது 50வது படமான மங்காத்தாவின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. நேற்றுடன் அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டன.
ஐபிஎல் கிரிக்கெட் பெட்டிங் சூதாட்டத்தை மையமாக வைத்து மங்காத்தாவை வெங்கட்பிரபு உருவாக்கியிருக்கிறார். இதில் விநாயக் மகாதேவன் என்கிற கெட்டவராக நடித்திருக்கிறார் அஜீத். அதாவது வில்லன். போலீஸ் அதிகாரியாக அர்ஜுன். இவர்கள் தவிர த்ரிஷா, பிரேம்ஜி, லட்சுமிராய் என நீள்கிறது நடிகர்கள் பட்டியல். யுவன் இசை.
சென்னை, மும்பை, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் போஸ்ட்புரொடக்சன் பணிகள் முடிந்து திரையில் மங்காத்தாவை ரசிகர்கள் ரசிக்கலாம்.
waiting 4 thala movie
ReplyDelete