6. அழகர்சாமியின் குதிரை
சுசீந்திரனின் இந்தக் குதிரை பாக்ஸ் ஆஃபிஸில் நுரை தள்ளுகிறது. 3 வாரங்களில் 56 லட்சங்களை மட்டுமே வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 4.3 லட்சங்களை வசூலித்து 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
5. ஆண்மை தவறேல்
சென்ற வாரம் வெளியான இந்த ஹாலிவுட் காப்பி பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்பதையே அதன் கலெக்சன் காட்டுகிறது. முதல் மூன்று தினங்களில் இப்படம் 5.6 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
4. வானம்
பி அண்ட் சி-யில் மிகச் சுமாராகப் போன இந்தப் படம் சென்னையில் இதுவரை 3.70 கோடிகள் வசூலித்திருப்பது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். சென்ற வார இறுதியில் இதன் வசூல் 7.1 லட்சங்கள்.
3. எத்தன்
சிரிப்பை மட்டும் பிரதானமாக நம்பி வெளிவந்திருக்கும் எத்தன் பத்து தினங்களில் 33 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 7.7 லட்சங்கள் மட்டுமே.
2. எங்கேயும் காதல்
இந்த காஸ்ட்லி காதல் காஸ்ட்லி விளம்பரங்களுக்குப் பிறகும் 2.76 கோடிகளை மட்டுமே இதுவரை வசூலித்துள்ளது. சென்ற வாரத்தில் இதன் வசூல் 10.2 லட்சங்கள்.
1. கோ
தொடர்ந்து முதலிடத்தில் கோ. சென்ற வார இறுதியில் 19.4 லட்சங்களை வசூலித்த இப்படம் ஆறு வார முடிவில் 6.798 கோடிகளை வசூலித்து அயன், சிங்கம், சிறுத்தை வசூல்களை அனாயாசமாக முறியடித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் கோ என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.