மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மழை பெய்விக்கும் பாக்டீரியா

அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக் கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீ ரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகி றார்கள்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.