அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ஒரு நொடியில் லட்சக்கணக்கான படங்களை எடுக்கும் வகை யில் புதிய கேமரா ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கேமராவில் இருந்து கிளம்பும் விசேஷ கதிர்கள் பொருட்களின் மீது பட்டு மிக வேக மாக பிரதிபலித்து காட்சி பதிவை ஏற்படுத்தும். இதனால் ஒரு நொடியில் சுமார் 60 லட்சம் படங்களை தொடர்ந்து எடுக்க முடியும். இந்த கேமரா நவீன தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. மிக அரிய நிகழ்வுகளையும் படம் பிடிக்கும் நுண்ணிய திறன் கொண்டது. எனவே இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் ரத்த செல்கள் மற்றும் முளையில் நிகழும் ரசாயன மாற்றங்களை கண்காணிக்க முடியும். இதனால் பல புதிய மருந்து பொருட்களை தயாரிக்க முடியும். இதனால் பல புதிய மருந்து பொருட் களை தயாரிக்க உதவும். மேலும் இது ரத்தத் தில் புற்றுநோயை உருவாக்கும் செல்களை தனித்து கண்டுபிடிக்கவும் துணைபுரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Not 60 லட்சம் படங்கள். only 60 படங்கள்
ReplyDelete