ரீமேக் படங்களில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டுகிறார். ரீமேக் படமான பரட்டை என்கிற அழகு சுந்தரம்
வெற்றி பெறாவிட்டாலும் அடுத்து நடித்த யாரடி நீ மோகினி அவருக்கு பெயர் வாங்கித் தந்தது. தற்போது நடித்து வரும் குட்டி படமும் தெலுங்கில் வெளியான ஆரியா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டி, ஆடுகளம் என பிஸியாக இருக்கும் தனுஷ் மேலுமொரு ரீமேக் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் வெளியான ரெடி என்ற படத்தை தனுஷுக்காக தேர்வு செய்துள்ளனர். ராம், ஜெனிலியா ரெடியில் நடித்திருந்தனர். படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கியிருந்தார்.
பொறியியல் கல்லூரி மாணவர் ராம். அவருடைய நண்பர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் பெண்ணின் பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கின்றனர். நண்பனுக்காக அவரது காதலியை கடத்தி வருகிறார் ராம். கடத்தி வந்த பிறகுதான் அது நண்பனின் காதலி அல்ல வேறொருவர் என்பது தெரிகிறது. இந்த தவறு ராமை எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது என்பது கதை.
மலையாளத்தில் மோகன்லால், ஐஸ்வர்யா நடித்த பட்டர்பிளை படத்தின் சாயலில் இருக்கும் ரெடி, தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைதான் தமிழில் தனுஷை வைத்து ரீமேக் செய்கிறார்கள். படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.