மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> I.C.C மீது அப்ரிடி கடும் சீற்றம்.....

ஒன்பது மாத இடைவெளியில் அடுத்த உலகக்கிண்ண (20 ஓவர்) தொடரை நடத்தவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின்(ஐ.சி.சி.) அட்டவணைக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் உலகக்கிண்ணத்தில் சகல துறைகளிலும் அசத்திய தனக்கு தொடர் நாயகன் விருது புறக்கணிக்கப்பட்டதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இரண்டாவது "ருவென்ரி20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இத்தொடரில் அபாரமாக ஆடிய இலங்கை வீரர் டில்ஷான் (317 ஓட்டம்) தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதற்கு பாகிஸ்தான் சாகித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; "ருவென்ரி20' உலகக்கிண்ணத்தொடரில் பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எனது செயல்பாட்டுக்கு ஐ.சி.சி. அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்தொடரில் 176 ஓட்டங்களும் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தி சகல துறைகளிலும் அசத்தியுள்ளேன் தவிர எனது களத்தடுப்பும் பாராட்டும் படியாக அமைந்தது. ஆனால், தொடர் நாயகன் விருதை ஐ.சி.சி. எனக்கு வழங்காதது அதிர்ச்சியளித்தது.

தற்போது தான் "ருவென்ரி20' உலகக்கிண்ண சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளோம். இந்த மகிழ்ச்சியை கொண்டாட போதுமான கால அவகாசம் இல்லை. அதற்கும் மூன்றாவது உலக்கிண்ணத் (20 ஓவர்) தொடர் மேற்கிந்தியாவில் நடக்கவுள்ளது. ஐ.சி.சி.யின் போட்டி அட்டவணை முறையானதாக இல்லை. ஏன் இப்படி ஒரு முடிவை ஐ.சி.சி. எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.விளையாட்டு உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்கு முன்னுரிமை கொடுப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என நினைக்கிறேன்.

அணியின் கப்டன் யூனிஸ்கான் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தார். மூன்றாவது வீரராக களமிறங்க யூனிஸ்கானிடம் விருப்பம் தெரிவித்தேன். அவரும் சிறப்பாக செயல்படுமாறு நம்பிக்கையளித்தார். தற்போது துடுப்பாட்டத்தில் போர்முக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. உலகக்கிண்ண வெற்றியை ஸ்வாட் பள்ளத்தாக்கில் வாழும் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானுடன் விளையாட விருப்பமில்லை. இங்கிலாந்தில் நடந்த உலகக்கிண்ண (20 ஓவர்) பயிற்சி போட்டியில் இந்தியாவுடன் விளையாடினோம்.அப்போது இந்திய அணிக்கு எங்களுடன் போட்டிகளில் பங்கேற்க விருப்பமில்லை என்பது தெரிந்தது. பாகிஸ்தானுடன் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்று அவர்கள் முகம் மட்டுமே சொல்கிறது.அவர்களது மனநிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை என்றார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.