மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அரசியலுக்கு வர்றார் அஜித்: மீடியாக்கள்

மலேசியாவில் 'அசல்' படப்பிடிப்பில் சிவனேன்னு தனது வேலையை செய்து வருகிறார் அஜித்.
அதற்குள் அவர் அரசியலுக்கு வரப்போவதாக வாரஇதழ் ஒன்று பரபரப்பை பற்றவைத்துள்ளது.

தனது ரசிகர்மன்றத்தை மக்கள் இயக்கமாக இன்று ஆரம்பித்திருக்கலாம் விஜய். ஐந்து வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றம் இயக்கமாக செயல்படும் என அறிவித்தார் அஜித். "இயன்றதைச் செய் இல்லாதவருக்கு" என்பதுதான் தனது இயக்கத்துக்கு அஜித் சொல்லிக்கொடுத்த மந்திரம். தமிழகத்தில் மட்டும் அஜித்துக்கு 35 ஆயிரம் மன்றங்களும், எண்ணிக்கையில் கோடியை தாண்டும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இவர்கள் தன்னை எளிதான முறையில் தொடர்பு கொள்ளவும் இயக்கத்தை பலப்படுத்தவும் சில திட்டங்களை தீட்டியுள்ளாராம் அஜித். அதன்படி இணையதளம் ஒன்றை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரசிகர்களுடன் பேசி சமூக பணிகளை முடுக்கி விடும் எண்ணம் அஜித்திடம் உள்ளது.

இதனை வைத்துக்கொண்டு விஜய் பாணியில் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற தோற்றத்தில் வாரஇதழ் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அஜித் தரப்பில் நாம் விசாரித்தபோது, 'அஜித்திடம் அப்படியொரு எண்ணம் இருந்ததும் இல்லை இருக்கப்போறதும் இல்லை. கடந்த 15 வருடங்களில் மட்டும் அஜித் செய்த உதவியினால் உயிர் பிழைத்தவர்கள் நிறைய. நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு விளக்கேற்றிவைத்த பெரிய மனசுக்காரர். ஆனால் செய்த உதவிகளை விளம்பரம் செய்து கொண்டதே இல்லை. இதுதான் அவருக்கு ஆத்மதிருப்தியை தருகிறது. அப்படிப்பட்டவருக்கு அரசியல் ஆசையெல்லாம் வராது" என்றார்.

"ஒருவேளை அஜித் அரசியலுக்கு வந்தாலும் சந்தோஷமே! கக்கன், காமராஜர் வழியில் அப்பழுக்கற்ற ஒரு அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைக்கும்" என்கிறார் ரசிகர் ஒருவர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.