மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நேரடி மோதலா? ரெட் ஜெயண்ட், கிளவுட் நைன்.

தாத்தா ஆட்சியில் இருந்தவரை பேரன்கள் நினைத்ததுதான் சட்டம். யார் எப்போது எந்தப் படத்தை வெளியிடுவது என்பது அவர்களின் முடிவு சார்ந்தது. ஆனால் அதெல்லாம் பழங்கதை.

விஷயம் வேறொன்றுமில்லை. கிளவுட் நைன் தயா‌ரித்திருக்கும் மங்காத்தா போஸ்ட்புரடெக்சனில் உள்ளது. அ‌ஜீத் நடித்திருக்கும் இப்படம் அவரது 50வது படம். அதேபோல் போஸ்ட்புரடெக்சனில் இருக்கும் இன்னொரு படம் ரெட் ஜெயண்‌ட்டின் 7 ஆம் அறிவு. முருகதாஸ் இயக்க சூர்யா நடித்திருக்கிறார்.

இவ்விரு படங்களின் வேகத்தை கணிக்கும் விமர்சகர்கள் இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்கிறார்கள். அப்படி வெளியானால் இரு நடிகர்களின் ரசிகர்களுக்கும் அது மிகப் பெ‌ரிய பந்தயமாக இருக்கும். விமர்சகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

இரு பிரமாண்ட படத்தையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு இரு படங்களின் வசூலையும் குறைத்துக் கொள்ளும் அளவுக்கு அதனை தயா‌ரித்தவர்கள் முட்டாள்களில்லை என்பவர்களும் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.