ஷங்கரின் நண்பன் படத்தில் ஏற்கனவே இட நெருக்கடி. விஜய் தொடங்கி எஸ்.ஜே.சூர்யா வரை ஏகப்பட்ட பேர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் புது வரவு, ஆண்ட்ரியா.
நல்லவேளையாக இதில் அவர் நடிக்கவில்லை. அப்புறம்...?
ஹீரோயின் இலியானாவுக்கு ஆண்ட்ரியா டப்பிங் குரல் கொடுக்க இருக்கிறார். ஆண்ட்ரியாவின் குரல்வளம் அனைவரும் அறிந்ததே. தமிழ், தெலுங்கில் பின்னணி பாடகியாகவும் இவர் இருக்கிறார். இவரது குரல் இலியானாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஷங்கருக்கு தோன்றியிருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல்படி டப்பிங் பேச ஆண்ட்ரியாவும் சம்மதித்திருக்கிறாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.