உடன் நடிக்கும் நடிகைகளுடன் எப்போதும் விஷாலை பொருத்திப் பார்ப்பதில் சிலருக்கு சந்தோஷம். அதற்கு தோதாக, நான் ஒருத்தரை காதலிக்கிறேன் என்று ஆர்வத்தை தூண்டுவதில் விஷால் கில்லாடி.
அந்த ஒரு ஆள் த்ரிஷா என்று சில வருடங்களுக்கு முன் வதந்தி பற்றியெரிந்ததை கிசுகிசு ப்ரியர்கள் அறிவார்கள். இப்போது வேறொரு நடிகை. இவர் நடிகர் சரத்குமாரின் மகளும் போடாபோடி ஹீரோயினுமான வரலட்சுமி.
விஷாலுக்கு வரலட்சுமியை பிடித்திருக்கிறது, ஆனால் அவர் வீட்டில்தான் எதிர்ப்பு என்பதுவரை ஸ்கிரீன்ப்ளே எழுதினார்ஙகள் சிலர். இதனை விஷால் அடியோடு மறுத்துள்ளார். எனக்கு பல வருடங்களாக வரலட்சுமியை தெரியும். நாங்க நல்ல நண்பர்கள். அதற்கு மேல் எதுவும் கடையாது என தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
அவர்தான் சொல்லிட்டாரே... விடுங்கப்பா.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.