
கௌதமின் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் இசை சேர்ப்பு பணிக்காக இளையராஜா லண்டன் சென்றுள்ளார்.
நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு இளையராஜா இசை என்றதும் அவரது ரசிகர்கள் அடைந்த உற்சாகத்துக்கு அளவில்லை. சமீபத்தில் வெளியான இளையராஜாவின் படங்கள் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது நிதர்சனம். ஆடியோ ரைட்ஸும் ரஹ்மான் படப் பாடல்களுக்குதான் அதிகம். அடுத்து ஹாரிஸ், அதையடுத்து யுவன். முதல் ஐந்து இடத்தில் இளையராஜா இல்லை.
மேஸ்ட்ரோவின் இந்தப் பின்னடைவை நீதானே என் பொன்வசந்தம் தலைகீழாக மாற்றும் என்பது ராஜா ரசிகர்களின் நம்பிக்கை. அதற்கேற்ப படத்தின் ஆடியோ ரைட்ஸை மிகப் பெரிய தொகைக்கு கேட்டிருக்கிறார்கள்.
பொன்வசந்தத்தின் இசை சேர்ப்புக்காக இளையராஜாவும், கௌதமும் லண்டன் சென்றுள்ளனர். ராஜாவின் ஃபேவரைட் ஹங்கேரி இசைக்கலைஞர்கள் இதில் பணிபுரிய உள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.