எஸ்.ஏ.சந்திரசேகரனும், தாணுவும் கொலை மிரட்டல் விடுத்தனர், துப்பாக்கியால் பேசுவோம் என்றனர் என கமிஷனர் அலுவலகத்தில் ஜாகுவார் தங்கம் புகார் செய்தார். பெப்சிக்குப் பதில் வேறு தொழிலாளர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கொள்ளை முடிவை எஸ்.ஏ.சி ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்தே ஜாகுவார் இப்படியொரு புகாரை அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இந்த ஜாகுவார் ஏற்கனவே ரஜினி, அஜீத்துக்கு எதிராக இப்படியான கற்பனை புகார்கள் கொடுத்தவர். இவர் ஆதரவாக சுட்டிக் காட்டிய படங்களில் ஒன்று ஞானவேலின் அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படத்தில் இவர்தான் ஸ்டண்ட் மாஸ்டராம். நன்றி விசுவாசம்.
ஜாகுவார் சொன்னது பொய் என்று எஸ்.ஏ.சி.யும் தாணுவும் கமிஷனரை சந்தித்து எதிர் புகார் தந்துள்ளனர். அதில் வடிவேலு என்பவர் எஸ்.ஏ.சி.யின் சட்டையைப் பிடித்து இழுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாகுவார் சொல்வது அனைத்தும் பொய் என்று இவர்கள் சொன்னதோடு, கமிஷனரிடம் அதற்கான டிவிடி ஆதரத்தையும் தந்தனர்.
எஸ்.ஏ.சி.யின் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கேயார் இவர்கள் இருவரின் புகாரையும் மறுத்துள்ளார். வடிவேலு எஸ்.ஏ.சி.யை கெஞ்சினாரே தவிர அவர்கள் சொல்வது போல் சட்டையை பிடிக்கவில்லை என்பது கேயாரின் விளக்கம்.
இந்த அடிடா பிடிடா கதை தொடர்ந்தால் தொழிலாளர் யூனியனுக்குப் பதில் தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடையும் வாய்ப்பு அதிகம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.