கார்த்தி நடிக்கும் மசாலாக்களுக்கு ஆந்திராவில் சிவப்பு கம்பள வரவேற்பு தந்து வந்தார்கள் ஆந்திரா ரசிகர்கள். ஹைதராபாத்தில் ஒருமுறை பேட்டி தந்தவர், எனக்கு தமிழ் ரசிகர்களைவிட தெலுங்கு ரசிகர்களைதான் பிடிக்கும் என சொன்னது நினைவிருக்கலாம். இது வெறும் பேச்சல்ல, அதுதான் உண்மை.
தெலுங்கு உரிமையை முன்வைத்தே நேற்று வந்த கார்த்தி கோடிகளில் சம்பளம் பெறுகிறார். அவரது சிறுத்தை தெலுங்கு விக்ரமார்க்குடு படத்தின் ரீமேக்காக இருந்தும், சிறுத்தையையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டார்கள் என்றால் இவரது தெலுங்கு மார்க்கெட்டை நினைத்துப் பாருங்கள். இப்போது இந்த கோட்டையில் சிறிது விரிசல் விழுந்திருக்கிறது.
அமீருடன் சவால் விட்டு பருத்திவீரன் படத்தை மல்லிகாடு என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட்டார் ஞானவேல்ராஜா. பெரிதாகப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் சிறிதாகக்கூடப் போகவில்லை. ஆந்திரா ரசிகர்கள் படத்தை முழுமையாக புறக்கணித்திருக்கிறார்கள். வீம்புக்காக வெளியிட்டு நஷ்டத்தை அறுவடை செய்திருக்கிறார்கள்.
இதேபோல் அரவான் படத்தை ஏகவீரா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட்டனர். அதுவும் அங்கு ப்ளாப்பாகியிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.