5. அம்புலி
அம்புலிக்கு இது ஆறாவது வாரம். இதற்குப் பிறகு வெளியான ஒரு டஜன் படங்களை பின்னுக்குத் தள்ளி இன்னும் டாப் 5-க்குள் இடம் பிடித்துள்ளது. ஆஹா ஓஹோ என்று புகழப்பட்ட ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழியால் டாப் 5-க்குள் இடம் பிடிக்க முடியவில்லை என்பது முக்கியமானது. அம்புலி சென்னையில் இதுவரை 75 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.9 லட்சங்கள்.
4. மாசி
ஆக்சன் கிங்கின் மாசி அதன் மோசமான மேக்கிங்கிற்கான பலனை பாக்ஸ் ஆஃபிஸில் எதிர்கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 26 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 4 லட்சங்கள்.
3. அரவான்
மூன்று வாரங்கள் முடிவில் வசந்தபாலனின் அரவான் 2.04 கோடியை வசூலித்துள்ளது. படத்தின் பட்ஜெட், உழைப்புடன் ஒப்பிடுகையில் இது யானைப் பசிக்கு சோளாப்பொரி. சென்ற வார இறுதியில் இப்படம் 7.2 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. காதலில் சொதப்புவது எப்படி
ஐந்து வாரங்கள் முடிவில் இப்படம் 3.27 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.09 லட்சங்கள்.
1. கழுகு
இம்மாதத்தின் சர்ப்ரைஸ் கழுகு. தொடர்ந்து இரண்டாவது வாரமும் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காத படம் என்று பெயரெடுத்த கழுகு எப்படி பாக்ஸ் ஆபிஸில் உயரப் பறக்கிறது என்பது ஆச்சரியம். இதுவரை 55 லட்சங்களை வசூலித்திருக்கும் இப்படம் சென்ற வார இறுதியில் 19.2 லட்சங்களை வசூலித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.