
நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டதால், அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்துக்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வற்புறுத்தி காந்தியவாதியும்,சமூக ஆர்வலருமான அண்ணா ஹசாரே நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
டெல்லியில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஹசாரேவின் இந்த போராட்டம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியதால், இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் 3 நாட்கள் மட்டுமே அனுமதி என்பது உள்பட 22 நிபந்தனைகளை டெல்லி காவல்துறையினர் அன்னா ஹசாரே குழுவிற்கு விதித்த னர்.
5 ஆயிரம் பேர் மட்டுமே உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும்; 3 நாட்கள் மட்டும்தான் அனுமதி அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை ஹசாரே குழுவினர் ஏற்கவில்லை.
இந்த 6 நிபந்தனைகளை ஏற்காததால் டெல்லி காவல்துறையினர் உண்ணா விரத போராட்டத்துக்கு இன்று அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் தடையை மீறி அன்னா ஹசாரே குழுவினர் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஹசாரே குழுவினர் ஏற்கனவே டெல்லியில் குவிந்துள்ளனர்.
இதனிடையே இன்று டெல்லியில் சுதந்திர தினக் கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மன்மோகன் சிங்,ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தீர்வாகாது என்றும், அதனால் ஊழல் ஒழிந்து விடாது என்றும் கூறினார்.
இதற்கு ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள கிரண்பேடி பலடி கொடுத்துள்ளார்.
"பிரதமர் உணர்வற்றவர் என்று தாக்கியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிறது.ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டு வர இந்த அரசு தவறிவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வாய்ப்பை செய்ய தவறிவிட்டது. இனியும் இந்த அரசை நம்ப நாங்கள் தயாரில்லை.
இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.பிரதமரின் பேச்சு இறுதியான தீர்ப்பு போல் இருக்கிறது.அவரது லோக்பால் மசோதா மக்களுக்கு எதிரானது. பிரதமர் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர். அரசின் லோக்பால் மசோதாவை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை" என்றார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.