மகன் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து மீண்டும் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ராணா படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்ட ரஜினிகாந்த் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.
பின்னர் சிறுநீரக பாதிப்பு இருந்ததால் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ரஜினிகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பூரண குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 13ஆம் தேதி சென்னை திரும்பினார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்கி தற்போது ஓய்வு எடுத்து வரும் ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கவில்லை.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர் ரஜினிகாந்த் பூரண நலமடைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
அக்டோபர் மாதம் ராணா படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் அதற்கு முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் இன்னொரு முறை ரஜினிகாந்த் உடல் பரிசோதனை செய்து கொள்வார் என கூறப்படுகிறது. அதன் பின்னரே ராணா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
Mahan alla mahal
ReplyDelete