இளம் இயக்குனர்களில் ஈகோ பார்க்காதவர், இனிமையானவர், நண்பர்களை மதிப்பவர் என்றெல்லாம் புகழப்படுகிறவர் லிங்குசாமி. நான் எடுக்கிறது நல்ல சினிமா இல்லை. ஆனா நல்ல சினிமா ஒருநாள் எடுப்பேன் என்று தன்னையே அடிக்கடி சுத்திகரித்துக் கொள்ளும் அளவுக்கு திடமானவர், வெளிப்படையானவர்.
லிங்குசாமியின் வேட்டை தற்போது தயாராகி வருகிறது. படம் முடிந்து ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானாலும் படத்தில் கரெக்சன் செய்வது லிங்குசாமியின் வழக்கம். இந்த கரெக்சனை சொல்வது அவரது நண்பர்கள்.
ஒரு படம் முடிந்தால் நண்பர்கள் பாலாஜி சக்திவேல், பிருந்தாசாரதி, நா.முத்துக்குமார், நந்தா பெரியசாமி, எழில் போன்றவர்களுக்கு திரையிட்டு காட்டுவார் லிங்கு. அவர்கள் படத்தைப் பார்த்து சொல்லும் திருத்தங்களை ஏற்று அதனை மாற்றவும் செய்வார். பையா படத்தின் கிளைமாக்ஸையே அப்படி மாற்றியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
வேட்டை படமும் இந்த மாற்றத்துக்கு உள்பட்டே நமது பார்வைக்கு வரவிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.