ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு ராணா படப்பிடிப்பை வைத்துக் கொள்கிறோம் என்றும் எந்த காரணத்தை கொண்டும் படத்தை கைவிட மாட்டோம் என்று பட தயாரிப்பு ஈராஸ் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ராணா படப்பிடிப்பு தொடக்க விழா ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தபோது ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த், பின்னர், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைவில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த டாக்டர்கள் உடனடியாக 'டயாலிசிஸ்' செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2 மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்துக்கு உடல் நிலை சரியானது. இதைத் தொடர்ந்து சென்னை திரும்பி ரஜினிகாந்த், 'ராணா' படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரோ, ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்றும் ரஜினிகாந்த் நிச்சயமாக நடிப்பார் என்றும் கூறினார். ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ரவிக்குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் 'ராணா' படம் கைவிடப்பட்டு விட்டதாக ஒரு தகவல் பரவியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 3 வேடங்களில் நடக்கும் ரஜினிகாந்த், வரலாற்று படம் என்பதால் குதிரை சவாரி செய்வது போல் பல காட்சிகள் வருகின்றன. ஆனால் ரஜினிகாந்தின் இப்போதைய உடல்நிலை குதிரை சவாரிக்கு இடம் கொடுக்காது என்பதால், 'ராணா' கைவிடப்பட்டுவிட்டதாகவும், அதற்கு பதில் வேறு ஒரு படம் தொடங்கப்படுவதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியது.
ஆனால், 'ராணா' படத்தை கைவிடவில்லை என்று பட தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் மறுத்துள்ளது. ''ரஜினிகாந்தின் உடல்நிலையை கருதி, 'ராணா' படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது உண்மை. ரஜினிகாந்த் இப்போது நன்றாக இருக்கிறார். அவருடைய உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறது. தினமும் நடைபயிற்சி செய்கிறார்.
எங்களுக்கு எந்த அவசரமும் இல்லை. ரஜினிகாந்த் உடல்நிலை இன்னும் வலுவான பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் `ராணா' படத்தை கைவிட மாட்டோம்'' என்று ஈராஸ் நிறுவனம் கூறியுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.