
வருடாவருடம் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை கிறீன் கார்டின் (Diversity Immigrant Visa Lottery Programm) மூலம் உலகெங்கிலும் இருந்து பலர் பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் இம்முறையும் 55.000 பேருக்கு அவர்களது தகமைகள் அடிப்படையில் இந்த விசா கிடைக்க இருக்கிறது.
2011 ஒக்ரோபர் 4ம் திகதியிலிருந்து இதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை நீங்கள் 2011 நவம்பர் 5 ம்திகதிவரைக்கள் மேற்கொள்ள வேண்டும். உங்கள் விண்ணப்ப விபரத்தை 2012 மே 1 ம் திகதியிலிருந்து www.dvlottery.state.gov என்ற தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.
இந்த நடை முறை அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி நடைமுறைப்படுத்தலில் தான் நடை பெறுவதால் இடைத் தரகர் யாருமே அரசாங்கத்தால் அமர்த்தப்படவில்லை. அதனால் இடைத் தரகர்கள் யாரிடமும் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.