மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மீண்டும் ஹீரோவாகிறார் வடிவேலு.

வடிவேலு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கான நகைச்சுவை கதை தயாராகி வருகிறது. அதேநேரம் காமெடியனாகவும் தனது கே‌ரியரை தொடரயிருக்கிறார் வைகைப் புயல்.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு வடிவேலு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஒரே படம் என்றால் அது பிரசாந்த் நடித்திருக்கும் மம்பட்டியான். இது ஆட்சி மாற்றத்துக்கு ஒரு வருடம் முன்பே தொடங்கப்பட்ட படம்.

ஹீரோவாகும் அதேநேரம் சுந்தர் சி. விமல், சிவாவை வைத்து இயக்கும் படத்தில் காமெடி போர்ஷனை ஏற்றுக் கொண்டிருக்கிறார். கி‌ரி, வின்னர் படங்களில் பீக்குக்குப் போன இந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை கலகலப்பூட்டும் என்பதில் ஐயமில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.