மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எ‌ப்படி இரு‌ந்த நா‌‌ன் இ‌ப்படி ஆ‌யி‌ட்டே‌ன் மீ‌ண்டு‌ம் வடிவேலு.

திரை‌ப்பட‌த்துறை‌யினரா‌ல் ஒது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த நகை‌க் சுவை நடிக‌ர் வடிவேலுவு‌க்கு த‌ற்போது இய‌க்குன‌ர் சு‌ந்த‌ர் ‌சி வா‌ழ்வு கொடு‌த்து‌ள்ளா‌ர். த‌ா‌ன் இய‌க்கு‌ம் பு‌திய பட‌த்த‌ி‌ல் நடி‌க்க வடிவேலுவை ஒ‌ப்ப‌ந்‌த‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர்.

கட‌ந்த ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க.வு‌‌க்கு ஆதரவாக‌வு‌ம், அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌க்கு எ‌திராகவு‌ம் ‌பிரசார‌ம் செ‌ய்தா‌ர் நடிக‌ர் வடிவேலு.

அ.‌தி.மு.க. ஆ‌ட்‌சியை கை‌ப்ப‌ற்‌றிய‌தை தொட‌ர்‌ந்து த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌த்துறை‌‌யி‌ல் இரு‌ந்து ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டா‌ர் நடிவ‌ர் வடிவேலு.

ஆனா‌ல் வடிவேலுவோ, ''நானாகத்தான் சினிமாவை விலக்கி வைத்துள்ளேன். என்னை யாரும் விலக்கவில்லை'' என்று கூறி வந்தார்.

இந்த நிலையில் வடிவேலுவை தனது பு‌திய பட‌த்த‌ி‌ல் ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்து‌ள்ளா‌ர் நடிகை கு‌ஷ்பு‌வி‌ன் கணவ‌ர் சு‌ந்த‌ர‌் ‌சி. இதன‌ா‌ல் ‌திரையுல‌கி‌ல் தனது 2வது இ‌ன்‌னி‌ங்சை ஆர‌ம்‌பி‌க்க உ‌‌ள்ளா‌ர் வடிவேலு.

எ‌ப்படி இரு‌ந்த நா‌‌ன் இ‌ப்படி ஆ‌யி‌ட்டே‌ன் எ‌ன்று இரு‌ந்த வடிவேலு, ‌மீ‌ண்டு‌ம் நடி‌க்க வ‌ந்‌திரு‌க்‌கிறா‌ர்.

இய‌க்குன‌ர் சு‌ந்த‌ர் ‌சி நடிகை கு‌ஷ்பு‌வி‌ன் கணவராவா‌ர். நடிகை கு‌ஷ்பு ‌தி.மு.க.‌வி‌ல் மு‌க்‌கிய பொறு‌ப்‌பி‌ல் இரு‌க்‌கிறா‌ர் எ‌‌ன்பது கு‌றி‌ப்‌பி‌ட‌த்த‌க்கது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.