மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


Wi-Fi தொழில்நுட்பத்தை விஞ்சும் 100 மடங்கு வேகம் கொண்ட புதிய தொழில்நுட்பம் Li-Fi இனைய பாவனை அடுத்தகட்டத்துக்கு தயார்.

LED மின்குமிழ்களின் ஒளி மூலம் சமிஞ்சைகளை கடத்தி அதி வேக இணைய இணைப்பை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் மூலம் இனைய பாவனையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல தயார்.

இணையத்தள இணைப்பை வயர் இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘WiFi’ என்ற தொழில்நுட்பம் உள்ளது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை வயர் இணைப்பு இல்லாமல் கணணி, செல்போன், மடிக்கணணி, லேப்லெட் போன்ற சாதனங்களில் இணையத்தள வசதிகளை பெற முடியும்.

ஆனாலும் ‘WiFi’ மூலம் தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு கஷ்டமாக இருக்கும். தற்போது WiFi வை விட 100 மடங்கு வேகம் கொண்ட தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இதற்கு ‘LiFi’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

WiFi இல் 1 ஜி.பி. தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ அதை விட 100 இல் 1 மடங்குதான் LiFi நேரம் எடுத்துக் கொள்கிறது. தகவல் தொழில் நுட்பத்தில் LiFi புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- A.D.ஷான் -Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.