மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இனவாதம் எனும் பாதகச்செயலை ஒருபோதும் செய்யப் போவதில்லை ஜனாதிபதி.

2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்திற்கு சமூகமளித்து தமது அமைச்சு தொடர்பிலான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டார்.

இதன்போது கருத்து கூறிய ஜனாதிபதி : தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவேன். சிறைக்கைதிகள் சிலருக்கு பிணை வழங்கினோம். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கை எடுத்தோம். டயஸ்போரா அமைப்புகள் மீதான தடையை நீக்கினோம். இதனை பின்னணியாகக் கொண்டு சில அடிப்படைவாத குழுக்கள், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளதாக பிரசாரம் செய்கின்றனர். அரசியல் மோசடிக்காரர்களின் இறுதி ஆயுதம் தேசப்பற்கு என நேரு அவர்கள் கூறியுள்ளார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தகவல்களைப் பெற்றே டயஸ்போரா மீதான தடையை நீக்கினோம்.


கே.பி, கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகியோரை விடுவித்து அவர்களுக்கு அமைச்சு மற்றும் முதலமைச்சர் பதவிகளை வழங்கி, 12,000 பேருக்க புனர்வாழ்வு அளித்து மஹிந்த ராஜபக்ஸவினால் விடுவிக்க முடியும் என்றால் சிறையில் இருந்தவர்களை விடுவிக்க நாம் எடுத்த நடவடிக்கை தவாறா என்பதை மனசாட்சியிடம் கேட்குமாறு கூறுகின்றோம். இனவாதம் பேச எம்மாலும் முடியும். ஆனால், நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அந்த பாவச்செயலை செய்யப் போவதில்லை.

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.