மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


சங்கக்கார மீண்டும் சதம்! சாதனைக்கு மேல் சாதனை

சிட்டகாங்கில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று சங்கக்கார தனது 319 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை அடுத்து 2வது இன்னிங்ஸிலும் 105 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 305/4 டிக்ளேர் செய்தது. வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு 467 ரன்கள் என்ற நிலையில் அந்த அணி இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ஆல் அவுட். மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

சங்கக்கார இதே டெஸ்ட் போட்டியில் 35வது டெஸ்ட் சத்தை எடுத்தார். ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் 424 ரன்களை விளாசியிருப்பது 3வது டெஸ்ட் சாதனையாகும்.

இதற்கு முன்னால் கிரகாம் கூச் அதிகபட்சமாக ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ரன்களையும் அதே டெஸ்ட் 2வது இன்னிங்ஸில் 123 ரன்களையும் எடுத்து மொத்தமாக 456 ரன்கள் எடுத்துள்ளார். இதனை அவர் லார்ட்ஸில் 1990ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நிகழ்த்தினார்.

மார்க் டெய்லர் பாகிஸ்தானுக்கு எதிராக பெஷாவரில் 334 மற்றும் 92 என்று 426 ரன்களை எடுத்தது 2வது.

தற்போது 319 மற்றும் 105 என்று சங்கக்கார 424 ரன்களை ஒரே டெஸ்ட் போட்டியில் எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.

பிரையன் லாரா இங்கிலாந்துக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 400 எடுத்து முதலில் 3வது இடத்தில் இருந்தார் தற்போது சங்கக்காரா அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிராக சங்கக்கார இப்போது தலை சிறந்த வீரராக திகழ்கிறார். கடந்த 8 இன்னிங்ஸ்களில் அவர் இந்த அணிக்கு எதிராக மட்டும் 994 ரன்கள்.

இந்த 8 இன்னிங்ஸ்களிலும் அவர் அரை சதத்திற்கு கீழ் எடுக்கவில்லை. இந்த அணிக்கு எதிராக அவர் வைத்திருக்கும் சராசரி 95.57. இது உலகில் எந்த பேட்ஸ்மெனும் எந்த அணிக்கு எதிராகவும் வைத்திருக்காத சராசரி ஆகும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.