பரதேசிக்குப் பிறகு இரும்பு குதிரை, ஈட்டி, கணிதன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இதுவரை காதல் கிசுகிசுவில் சிக்காத இருந்த இவரும் இப்போது காதலில் சிக்கிக் கொண்டதாக இரும்பு குதிரை யூனிட் கிசுகிசுக்கிறது.
இந்தப் படத்தில் பீட்சா டெலிவரி செய்பவராக நடிக்கிறார் அதர்வா. இவருக்கு ஜோடி ப்ரியா ஆனந்த். படத்தில் ஜோடி சேர்ந்த இவர்கள் நிஜத்திலும் நட்பை தாண்டிய உறவை பேணி வருவதாக தகவல்.
காதல் வசப்பட்ட எல்லா இளைஞர்களையும் போலவே மந்திரித்துவிட்ட கோழியாகிவிட்டார் என இரும்பு குதிரை யூனிட் கவலையில் உள்ளது.
சினிமா இன்டஸ்ட்ரியில் இதுபோன்ற கிசுகிசுக்கள் சகஜம். அதேபோல் இதுவும் கிசுகிசுவாகவே இருந்தால் அதர்வாவின் கேரியருக்கு நல்லது. ப்ரியா ஆனந்துக்கும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.