மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


ஆர்யா படமும் அஜீத் சென்டிமெண்டும் தமன் இசையும்.

மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன் படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். நேமிசந்த் ஜபக் ஸ்டுடியோஸ் சார்பில் ஹிதேஸ் ஜபக் படத்தை தயாரிக்கிறார். ஹன்சிகா ஆர்யா ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.

இந்தப் படம் 2013 டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கியது. பல முக்கியமான காட்சிகளை இந்த முதல் ஷெட்யூல்டில் மகிழ்திருமேனி இயக்கினார்.

நேற்று படத்தின் இரண்டாவது ஷெட்யூல்ட் பின்னி மில்லில் தொடங்கியது. சண்டைக் காட்சிகள் இங்கு எடுக்கப்பட உள்ளன. அதற்காக அரங்கும் அமைக்கப்பட்டிருக்கிறது.

அஜீத் படத்தின் முக்கிய நிகழ்வுகள் வியாழக்கிழமைதான் நடக்கும். அதேபோல் ஆர்யாவின் மீகாமனின் முதல் மற்றும் இரண்டாவது ஷெட்யூல்ட்கள் வியாழக்கிழமையில்தான் ஆரம்பிக்கப்பட்டன. 

மீகாமனுக்கு எஸ்எஸ் தமன் இசையமைக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.