நிருபர் வேலையென்றால் சினிமாக்காரர்களுக்கு ரொம்ப ஈஸி போல் தெரிகிறது. கோவில் கார்த்திகாவையும், வேலாயுதத்தில் ஜெனிலியாவையும் நிருபர்களாக காண்பித்து கிச்சு கிச்சு மூட்டினர். இந்த அசமந்த அழகிகள் நிருபர் வேலையை பேஷன் ஷோ போலதான் கையாண்டிருந்தனர்.
ஏ.எம்.ரமேஷ் சந்தக்கடத்தல் வீரப்பன் கதையை வன யுத்தம் என்ற பெயரில் எடுத்து வருகிறார் அல்லவா. அந்தப் படத்தில் லட்சுமிராய் நிருபராக வருகிறாராம். போலீஸ் அதிகாரி வேடத்தில் அர்ஜுன் நடிக்கும் இந்தப் படத்தில் விஜயலட்சுமி வீரப்பன் மனைவியாக நடிக்கிறார்.
நிருபராக வருகிறவருக்கு நமது நக்கீரன் கோபாலின் கடல் மீசையல்லவா இருக்க வேண்டும். இந்த மழுமழு நிருபர் வீரப்பனை எப்படி எதிர் கொள்கிறார் என்பதை பார்க்கலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.