அர்ஜுன் டாக்டராக நடித்திருக்கும் காட்டுப்புலி படத்தில் இடம்பெற்ற முத்தத்துக்கு சென்சார் தடை விதித்திருக்கிறது.
அடர்ந்த காட்டுப் பகுதியில் சிலர் தொலைந்து போகிறார்கள். அதில் இரு இளம் ஜோடியும், அர்ஜுன், அவரது மனைவி, மகள் ஆகியோரும் அடக்கம். நர மாமிசம் சாப்பிடும் ஆதிவாசிகள் வசிக்கும் காடு அது. அங்கிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை கவர்ச்சி நிரம்பிய த்ரில்லுடன் இயக்கியிருக்கிறார் டினு வர்மா. இவர் பாலிவுட்டின் பிரபல சண்டை இயக்குனர். அதனால் காட்டுப்புலி இந்தியிலும் வெளியாகிறது.
இந்தப் படத்தில் இளம் ஜோடிகளில் ஒன்றான ஜாஹன், ஜெனிஃபர் லிப் டு லிப் முத்தம் கொடுத்திருக்கிறார்கள். இந்த நீண்ட முத்தத்துக்கு சென்சார் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. இதனால் டினு வர்மா டோட்டல் அப்செட்.
17 டேக்கிற்குப் பிறகு ஓகே ஆன முத்தமாம் இது. வருத்தம் இருக்கத்தானே செய்யும்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.