மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பெப்சி ஸ்டிரைக் தாண்டவத்தை பெ‌ரிதாக பாதிக்கவில்லை.

பெப்சி ஸ்டிரை‌க்கால் தமிழகத்தில் படப்பிடிப்புகள் ரத்தானாலும் வெளிமாநிலங்களில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். விக்ரம் நடிக்கும் தாண்டவம் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. பெப்சி ஸ்டிரைக் இதன் படப்பிடிப்பை பெ‌ரிதாக பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் இயக்க விக்ரம், எமி ஜாக்ஸன் நடிக்கும் இந்தப் படத்தின் டூயட் பாடல் ஒன்று விக்ரம், அனுஷ்கா நடிப்பில் படமாக்கப்பட்டது. ஒரு பாதி கனவு நீயடி எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தவர் ‌ஜி.வி.பிரகாஷ்குமார்.

தாண்டவம் படத்தை விஜய், விக்ரமின் முந்தைய படமான தெய்வத்திருமகளை தயா‌ரித்த யு டிவி தயா‌ரிக்கிறது. தெய்வத்திருமகள் எப்படி ஹாலிவுட் ஐயம் சாம் படத்தின் காப்பியோ, அதேபோல் இதுவும் ஹாலிவுட் பார்ன் சீ‌ரிஸ் படங்களை‌த் தழுவியது எனக் கூறப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.