Tuesday, February 21, 2012

> பில்லா 2 ‌திட்டமிட்டபடி மே 1 தேதி ரிலீஸ்

பெப்சி ஸ்டிரைக்கால் பெரும்பாலான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட பில்லா 2 யூனிட் ஹைதராபாத் ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தியது. பிரச்சனை வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் படப்பிடிப்பை முடிப்போம் என மொத்த யூனிட்டும் பரபரப்பாக இயங்கியது. காரணம் படத்தின் ‌ரிலீஸ் தேதி.

எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயா‌ரிப்பில் அ‌‌‌ஜீத் தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த போது மே 1 அவரது பிறந்தநாளின் போது தவறாமல் ஒரு படம் வெளியாகும். இந்த கணக்கு பல வருடங்களாக மிஸ்ஸாகிப் போனதில் அ‌‌ஜீத் ரசிகர்களுக்கும் வருத்தம்தான். இந்தமுறை பில்லா 2 ஷெட்யூல் ச‌ரியாக மே மாதத்தில் படம் ‌ரிலீஸாகும்படி அமைந்துள்ளது. இதனை ச‌ரியாகப் பயன்படுத்திக் கொள்ள அ‌‌ஜீத்தைவிட தயா‌ரிப்பாளர் அதிக ஆவலில் இருக்கிறார்.
‌‌
படப்பிடிப்பை பொறுத்தவரை இன்னும் சில வாரங்களில் முடிந்துவிடுமாம். யுவன் தனது பணியை முடித்துவிட்டார். அதாவது பாடல்கள் ஏற்கனவே கம்போஸாகிவிட்டன. இதனால் மே 1 திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்ற நம்பிக்கையில் உள்ளது பில்லா 2 யூனிட். ரசிகர்களும் அதே நம்பிக்கையில் உள்ளனர்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.