மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காதலில் சொதப்புவது எப்படி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.

5. தோனி
நல்ல படம் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் தோனிக்கு ரசிகர்களின் வரவேற்பு சுமார்தான். சென்ற வார இறுதியில் 6.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை சென்னையில் 64 லட்சங்களை வசூலித்து டாப் 5இல் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

4. அம்புலி
3D படமான அம்புலியில் பார்த்திபன் தவிர்த்து வேறு தெ‌ரிந்த முகங்கள் இல்லை. இப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 7.7 லட்சங்கள் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் வசூல் அதிக‌ரிக்கும் என நம்பப்படுகிறது.

3. மெ‌ரினா
முதலிடத்தில் இருந்த மெ‌ரினா மூன்றாவது இடத்துக்கு கீழிறங்கியிருக்கிறது. இதுவரை சென்னையில் 1.78 கோடி வசூலித்த இப்படம் சென்ற வார இறுதியில் 10.5 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. முப்பொழுதும் உன் கற்பனைகள்
பெரும் பொருட் செலவில் தயாராகியிருக்கும் இப்படம் ரசிகர்களை கவர தவறிவிட்டது. என்றாலும் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு காரணமாக முதல் மூன்று தினங்களில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது. வசூல் 43 லட்சங்கள்.

1. காதலில் சொதப்புவது எப்படி
இந்த ரொமாண்டிக் காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. சில ல‌ட்ச‌ங்க‌ள் வித்தியாசத்தில் இப்படம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 49.7 லட்சங்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.