விஜயகாந்த் படிப்படியாக முன்னேறி வந்த காலகட்டம். அப்போது விஜயகாந்த் என்ற பெயரின் வெற்றிக்குப் பின்னால் தூண் போல் ஒரு பெயர் ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவரின் ஆத்ம நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். விஜயகாந்துக்கு தளர்வு நேர்ந்த போதெல்லாம் தாங்கிப் பிடித்தவர்.
விஜயகாந்துக்கு திருமணமான பின்பு இவர்கள் உறவில் விரிசல் விழுந்தது. நண்பனுக்கு கொடுத்து வந்த முக்கியத்துவம் விஜயகாந்தின் கிச்சன் கேபினெட்டால் கொஞ்சம் கொஞ்சமாக துண்டிக்கப்பட்டது. ராவுத்தர் தனிமைப்படுத்தப்பட்டார்.
விஜயகாந்த், ஜெயலலிதா நேரடி மோதலில் இறங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டிருக்கிறார் ராவுத்தர். அவருடன் ஆயிரக்கணக்கில் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிமுக-வில் இணைந்துள்ளனர்.
விஜயகாந்தின் இறங்குமுகத்தின் தொடக்கமா இது?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.