ஆணோ பெண்ணோ மனம் கவர்ந்தவரின் பெயரை பச்சைக் குத்திக் கொள்வதுண்டு. மாஸ்டருடன் இணக்கத்தில் இருந்த போது காதல் கிறக்கத்தில் நயன்தாரா அவரது பெயரை பச்சைக் குத்திக் கொண்டார். இப்போது ஏண்டா அப்படி செய்தோம் என்றாகிவிட்டது அவருக்கு. ஆனால் உதயநிதி குத்திக் கொண்ட டாட்டூவால் அவருக்கு எந்த காலத்திலும் பிரச்சனை வரப்போவதில்லை.
அதிகமாக நடிக்கவே தெரியாமல் வெளிவந்த முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி வசூலில் சாதனை படைத்திருக்கிறது. சென்னை வசூலில் எந்திரனை இந்தப் படம் தொட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சென்னை சிட்டியில் தொடர்ந்து மூன்று வார இறுதியில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் படமும் இதுதான்.
இந்த வெற்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதற்காக படத்தின் முதல் எழுத்துக்களை - ஓகே ஓகே - பச்சைக் குத்திக் கொண்டிருக்கிறாராம் உதயநிதி. அடுத்தப் படமும் இப்படி சூப்பர்ஹிட்டானால் அதையும் பச்சை குத்திக்குவீங்களா?
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.