
கலைஞனுக்கு கோபம் இருக்க வேண்டியதுதான். அது கரை கடந்தால்...? நந்தா பெரியசாமியின் அழகன் அழகி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த மிஷ்கினின் வார்த்தைகள் மேடை நாகரிகத்தின் தோலை சிராய்த்தது அனைவருக்கும் அதிர்ச்சி.
நந்தா பெரியசாமியின் எந்தப் படத்தையும் பார்த்ததில்லை என்றுதான் ஆரம்பித்தார் மிஷ்கின். அவர் நூறு வயசு வாழணும் என்று வாழ்த்தியவர் அப்படியே பாலாஜி சக்திவேலின் வழக்கு எண்ணுக்கு வந்தார். காரைக்குடியில் முகமூடி கிளைமாக்ஸ் ஷூட் பண்ணுன நேரம் போக மற்ற நேரத்தில் வழக்கு எண் படத்தின் வசூல் பற்றி பேசிக் கொண்டிருந்ததாகவும், பாலாஜி சக்திவேலிடம் கலெக்சன் எப்படி என்று கேட்டதற்கு ஓகே என்று அவர் சொன்னதாகவும் மிஷ்கின் குறிப்பிட்டார்.
நல்ல படம் எடுங்கன்னு சொல்றீங்க, அப்படி எடுத்தா எவனாவது பார்க்கிறீங்களா என்பதுதான் அவரின் கோபம். படம் வெற்றி ஓகே. ஆனா டைட்டானிக் மாதிரியான ஒரு வெற்றி இந்தப் படத்துக்கு கிடைச்சிருக்க வேண்டாமா... மாப்பிள்ளை பார்க்கிறப்போ நல்ல ஆளான்னு கேட்கறீங்க, படத்துக்கு போகும் போது மட்டும் ஏன் நல்ல படமான்னு கேட்க மாட்டேங்கிறீங்க... மிஷ்கினின் கோபத்தில் சென்னையின் மூன்றெழுத்து கெட்டவார்த்தை சரளமாக வெளிவர கேட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி.
அடுத்த ஒரு வார சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் மிஷ்கின்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.